
கோவை தெற்குத் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் அதே வேகத்தில் நகரின் பலபகுதிகளில் பிரசாரம் செய்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒரே அடியாக முழுக்குப்போட்டுவிட்ட நிலையில் கமல்தான் “விட மாட்டேன்”என்று திமுக ,அதிமுக ஆகிய கட்சிகளுடன் மல்லு கட்டிக்கொண்டு இருக்கிறார்.
இதோ கோவையில் அதிகாலை வாக்கிங் தன்னந்தனியே ! அதிகாலையில் கோவையின் கிளைமேட் குளுகுளுவென இருக்கும். இதமாக இருக்கும்.
“நானும் கோயம்புத்தூர்க்காரன்தான் !” என்பதை வலியுறுத்தும் வகையில் நடைப்பயிற்சி.!
மக்கள் எல்லோரும் கமலை ஆர்வத்துடன் பார்த்தபடியே நடந்தனர் .












