
மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடித்தளமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படத்தின் பெயர்தான் ‘தலைவி.’
எப்படியும் தேர்தலுக்கு முன்னதாக படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டார் இயக்குநர் ஏ.எல்.விஜய். தற்போது அந்தப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
தலைவியாக நடித்திருக்கிற பாலிவுட் நடிகை கங்கனாவின் பிறந்த நாள் மார்ச் 23 ஆம் தேதி வருகிறது..இதன்பிறகு சரியாக ஒரு மாதம் கழித்து படம் திரைக்கு வந்து விடும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
படத்தின் முன்னோட்டத்தை பெரிய அளவில் கங்கனாவின் பிறந்த நாளன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
விஷ்ணுவர்தன்,சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பாளர்களாக ஹிதேஷ் தாக்கர் ,திருமால் ரெட்டி ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்தி ,தமிழ் ,தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஏப்ரல் 23 -ல் ரிலீஸ் ஆகிறது.












