Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கங்கனாவை அழவைத்த விஜய்.!

admin by admin
March 24, 2021
in News
420 5
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகியுள்ள  தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு,சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்  பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

You might also like

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

இவ்விழாவில் நடிகர் தம்பி ராமையா கூறியதாவது…

” 1982-ல் ஜெயலலிதா தன்னை அதிமுக-வில் இணைத்து கொண்டபிறகு. 1982-2016 வரை இந்திய அரசியலை அவரை தள்ளிவைத்து பார்க்க இயலாது. சினிமா ,அரசியல் வாழ்வில்  பெரும் ஜாம்பவானாக இருந்த ஜெயலலிதா அம்மையார் பற்றிய படம்..

இந்திராகாந்தி அம்மையார், மம்தா பேனர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா இவர்கள் நான்கு பேரையும் கலந்ததைப் போல் கங்கனா ரனாவத் இருக்கிறார்..

திறமை இருக்கும் இடத்தில் திமிர் வரும், கர்வ திறமை கொண்ட தேவதை, அவருடன் நடிக்கும்போது அதை நான் பார்த்தேன், அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். தியாகராஜா பாகவதர், எம் ஜி ஆர், கமல், அஜித்குமார், இவர்கள் அனைவரும் அழகின் உச்சம், இவர்கள் அனைவரின் கலவையாக அரவிந்தசாமி உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்திற்கு இவர் தவிர யாரும் பொருத்தமாக இல்லை.”என்றார் 

நடிகர், இயக்குநர் சமுத்திரகனி பேசியதாவது….

“மிகப்பெரும் ஜாம்பவான்கள் பங்கு கொண்டிருக்கும் படத்தில் நானும் இருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இயக்குநர் விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 1000 பக்கங்கள் கொண்ட “ஆர் எம் வி ஒரு தொண்டர்” எனும் புத்தகத்தை படிக்க சொன்னார். படித்து வியந்து விட்டேன். இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்களா, என ஆச்சர்யமாக இருந்தது. என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என பயமாக இருந்தது.

இயக்குநர் விஜய் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார். எம் ஜி ஆரை நான் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் 15 நாள் அவர் கூடவே இருந்தது போல் இருந்தது. நண்பர் அரவிந்த்சாமி அவரை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளார். சிறு சிறு விசயங்களிலும் மெனெக்கெட்டு உழைத்தார். ஜெயலலிதா அம்மாவின் ஆவி புகுந்தது போல் கங்கனா செய்திருக்கிறார். நிச்சயம் அவரது உழைப்பு பாராட்டு பெறும். நான் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்றால், அதற்கு இயக்குநர் விஜய் தான் காரணம். அவர் துளித்துளியாக படத்தை செதுக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது..

“பாடலாசியராக மட்டுமல்லாமல் திரைக்கதையிலும் பட உருவாக்கத்திலும் பணிபுரிந்தது புது அனுபவமாக இருந்தது. இப்படத்தின் திரைக்கதைக்காக விஜயேந்திர பிரசாத் உடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். திரைக்கதை பற்றிய அவரது பார்வை, நிறைய கற்று தந்தது. இந்த மாதிரி கதைகள் செய்யும்போது எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும் ஆனால் இயக்குநர் விஜய் தெளிவாக இருந்தார். “என்றார் 

இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் பேசியதாவது…

தலைவி இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். மிகப்பெரும் ஆளுமைகள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் இசை ஒரு காலகட்டத்தை சொல்வதாக இருக்கும். அந்த காலகட்டத்தை இசையில் கொண்டுவர முயற்சித்துள்ளேன். ஜெயலலிதா அம்மாவிற்கு ஒரு தனி இசை தொகுப்பை உருவாக்கியிருக்கிறேன். உங்கள் அனைவரும் பிடிக்கும் என நம்புகிறேன்.என்றார் 

திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் பேசியதாவது…

“தலைவி எனக்கு ஒரு மிகச்சிறப்பான பயணமாக இருந்தது. படத்தை பற்றி அவர்கள் தந்த தகவல் தொகுப்புகள், பிரமிக்க தக்க வகையில் இருந்தது. நடிகை கங்கனா எனக்கு ஜெயலலிதா பற்றி அதிகம் தெரியாது, நான் எப்படி தயாரவது என்று கேட்டார். நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா. கங்கனாவும் அதே போன்றவர் தான். தேசிய விருதை வென்றுள்ளார் தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.”என்றார் 

இயக்குனர் விஜய் கூறியதாவது

“இப்படத்திற்காக இரு வருடங்கள் முன் தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது, சிறு தயக்கம் இருந்தது. பின்னர் இப்படம் செய்ய வேண்டும் என ஒப்புகொண்டேன். எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் வேலை செய்தது, மீண்டும் பள்ளி செல்வது போல், மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அரவிந்த் சாமி நடித்தது படத்திற்கு மிகப்பெரிய பலம், அவருடைய உழைப்பின் மூலம் இந்த படத்தை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளார்.

ஜீவி எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போல, அவருடைய பங்கு இந்த படத்தில் மிகப்பெரியது, அவருடைய பாடல்கள் இந்த படத்தில் பெரிதாக பேசப்படும். மதன் கார்க்கி, அஜயன் பாலா இருவரும் இந்த படத்தில் பெரும் பங்குவகுகித்துள்ளனர். பாக்கியஸ்ரீ, தம்பி ராமையா, மதுபாலா மூவரும் அவர்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். அரசியல் கதையாக பார்க்காமல், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்ற, ஒரு பெரும் ஆளுமையை பற்றிய படமாக இது இருக்கும்.

நடிகர் அரவிந்த் சாமி பேசியதாவது….

ஒன்றறை வருட பயணம் இது. இம்மாதிரியான படத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து எனக்கும் வாய்ப்பு தந்தற்கு, தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இப்படத்தில் வரும் அனவைருமே, வரலாற்று நாயகர்கள். இப்படிபட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இப்படத்தில் மிகப்பெரும் ஆளுமைகள் ஒன்றிணைந்து பணியாற்றீயுள்ளார்கள் அவர்களால் தான் இப்படம் சாத்தியமாகியுள்ளது. கங்கனா அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரகனி, தம்பி ரமையா, நாசருடன் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் இப்படத்தில் நடிக்க நான் கஷ்டப்பட்டு உழைத்ததாக கூறினார்கள். ஒரு கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டும் என்று நமக்கு முதலிலேயே தெரியும் அதை செய்ய வேண்டியது நம் கடமை. நான் இஷ்டப்பட்டு மகிழ்சியுடன் தான் இப்படத்தை செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது. நன்றி”என்றார் 

நடிகை கங்கனா ரனாவத் பேசியதாவது…

“தலைவி” திரைப்படத்திற்காக முதலில் என்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியனேன். பிறகு இயக்குனர் விஜய் தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததார். மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது. பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு கொடுக்கப்பட்டதே இல்லை தலைவி படத்தில் இயக்குனர் விஜய் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். என் திறமைக்கு மதிப்பளித்தார்{ அவர் இதனை கூறியபோது கண்கலங்கினார் } என்னை முழுதாக இப்படத்திற்காக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் நடித்த பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்படம் மொத்த இந்தியாவிற்கானது. அனைவருக்கும் பிடிக்கும். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன் நன்றி”என்றார்.

 

Tags: அரவிந்தசாமிகங்கனாசமுத்திரக்கனிதலைவிவிஜய்
admin

admin

Related Posts

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.
News

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

by admin
July 9, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!
News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

by admin
July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!
News

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

by admin
July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !
News

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

by admin
July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!
News

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

by admin
July 8, 2026

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?