“திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக “நடிகர் ஆர்யா மீது வெளிநாட்டுப் பெண் ஒருவர் புகார் கூறி அதை இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தார்.
அந்த புகார் பிரதமர் அலுவலகம் வழியாக தமிழக அரசுக்கு வந்து சேர்ந்தது.
அந்த புகாரை தற்போது சி.பி.சி.ஐ.டி .க்கு மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள்.
ஜெர்மனில் வாழ்கிற ஈழத்தமிழ்ப் பெண் விட்ஜா .இவர்தான் நடிகர் ஆர்யா ,அவரது அம்மா ஆகியோர் மீது புகார் அளித்திருக்கிறார்.
ஜெர்மனியில் அரசுப்பணியில் இருப்பவர் விட்ஜா .தன்னுடன் 3 ஆண்டுகளுக்கு மேலாக பழகிய பின்னர் தன்னை காதலிப்பதாகவும் மணந்து கொள்ள விரும்புவதாகவும் சொல்லி 70,40,000 ரூபாயை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் வழியாக ஆர்யா பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. திரும்பவும் பணத்தை கேட்டபோது ஆர்யாவின் அம்மா தகாத வார்த்தைகளால் திட்டினாராம்.
ஆர்யா மீதான மோசடிப் புகார் தொடர்பாக வாட்ஸ் அப் சாட்டிங் ,ஆடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆர்யா கைது செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை.