
படப் பிடிப்பு முழுமையாக முடிந்த பின்னர்தான் அந்த படங்களுக்கு பெயர் வைக்கிறார்கள்.
அதுதான் இன்றைய நாகரீகம்.
முன்பெல்லாம் பெயரை வைத்துவிட்டு ஷூட்டிங் செல்வார்கள். அது பழசாகிவிட்டது. பிள்ளையை பெத்த பிறகுதானே சார் பேர் வைக்கிறோம் .அதனாலே படம் முடிந்த பிறகு அதற்கேற்ற மாதிரி பெரு வைக்கிறதுதான் சக்ஸஸ் பார்முலா என்று புது விளக்கம் வருகிறது.
அதனால் விஜய் 65 என்கிற படத்தின் படப்பிடிப்பை ஷார்ஜாவில் நடத்தப்போகிறார்கள். சென்னையில் சில நாட்கள் நடக்கும் என்று இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள்.
இந்த படத்துக்கு அனிருத் இசை. மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு. நாயகி பூஜா ஹெக்டே .
இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் படம் மார்ச் 26 இல் வெளியாகும், அதன்பின் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்பது ஒரிஜினல் பிளான். ஆனால் சிவகார்த்திகேயனின் டாக்டர் மே மாதம்தான் ரிலீஸ் என்பதால் விஜய் படத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கப்போகிறார்கள்.












