நெட்டிசன்களும் பல நேரங்களில் அத்துமீறிவிடுகிறார்கள். அதற்கு சில நடிகைகளின் “திறந்திடு சீஸேம் “மாதிரியான படங்கள்தான் காரணம்.
அண்மையில் நடிகை பிரியாமணி கருப்பு ஆடைகளில் கவர்ந்திழுக்கிற கவர்ச்சியில் படங்களை வெளியிட்டிருந்தார்.
அதை பார்த்த நெட்டிசன் எல்லையை கடந்து “உங்களின் முழு நிர்வாண படங்களை வெளியிடுவீர்களா?” என்பதாக கேட்டிருந்தார்.
அதற்கு பிரியாமணி பதிலும் கொடுத்தார். செவிட்டில் அறைந்த மாதிரி.!
“முதலில் உன்னுடைய அம்மா,சகோதரி ஆகியோரின் நிர்வாண படங்களை வெளியிடு. அதை பார்த்துவிட்டு நானும் வெளியிடுகிறேன்”
இந்த பதிலால் மனம் வருந்திய நெட்டிசன் மன்னிப்பு கேட்டு பதிவு போட்டிருந்தார்.
அதை பிரியாமணி ஏற்கவில்லை.” இங்கே மன்னிப்புக்கு இடமே இல்லை. ஏற்கனவே டேமேஜ் பண்ணியாச்சு.” என குறிப்பிட்டிருக்கிறார்.