
திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு அத்திமர ஆப்பு.!
“திரைப்படத் தணிக்கைச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி இயங்காது”என்பதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்து விட்டது.
தணிக்கைக்குழுவின் முடிவுகளை ஏற்க மறுக்கிற தயாரிப்பாளர்கள் முன்னைப்போல மேல் முறையீட்டு தீர்ப்பாயம் செல்ல முடியாது. கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்.
எலக்சன் முடிவுகளை ஏற்க முடியாது என்று கோர்ட்டுக்குப் போனவர்கள் ஐந்தாண்டு கழித்தும் தீர்ப்பும் கிடைக்காமல் அல்லாடும் காலம் இது.
இப்படிப்பட்ட நடைமுறை இருக்கிற காலத்தில் தயாரிப்பாளர்களால் வருடக்கணக்கில் காத்து இருக்க முடியுமா? அல்லது நீதி மன்றங்களுக்குத்தான் நேரம் இருக்குமா? என்னமோடா ராமா! தமிழ்நாட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும்தான் பாஜக.வை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ? இன்னமும் யாரும் அறிக்கை கொடுக்கவில்லை.
இந்த முடிவுக்கு இந்திப்பட இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், ஹன்ஸல் மேத்தா, நடிகை ரிச்சா சட்டா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












