இதைத்தான் விதின்னு சொல்வாய்ங்களோ?
பின்னே என்னங்க, கல்யாணத்தன்னிக்கி மேல சட்டை கூட போடாம வெறும் அரைக்கால் டவுசரை மட்டும் போட்டுக்கிட்டு தாலி கட்டணும்னா அத விட கொடுமை வேற என்னங்க.?
இதில கையை ‘சிலிங் ‘ போட்டு தங்கவேண்டியதா இருக்கு. கையில கால்ல அடி,காயம். பிளாஸ்டர் ! சட்டை கூட போட முடியாத அளவுக்கு வலி. தோளில் சர்ஜரி.
ஆனாலும் கல்யாணம் நடந்தாகணும்? மாப்பிள்ளை இப்படி முக்கா நிர்வாணமா இருந்தா பொன்னும் அப்படி இருக்க முடியுமா? ஜாவா பெண்களுக்கே உரிய ஜில்ஜில் டிரஸ்.
மாப்பிள்ளைக்கு என்னம்மா ஆச்சு?
எலிண்டா டிவி கிறிஸ்டியானி ..இதான் பொண்ணோட பேரு .அந்த பொண்ணு சொன்னதை கேளுங்க.
கலியாணத்துக்கு நாலு நாள் முன்னாடி மாப்ள சுப்ரப்டோ , பெட்ரோல் வாங்க பைக் ல போனார். போற வழியிலேயே மயக்கம் வந்திருக்கு. நினைவு இல்ல. கீழே விழுந்து படுகாயம். இருந்தாலும் கல்யாணம் நின்னு போகக்கூடாதுன்னு நடத்திட்டோம்”என்கிறாள் .
காயங்களை காட்டி கல்யாணத்தை தள்ளிப்போடாம பொண்ணுக்கு புருஷனான சுப்ரப்டோவுக்கு வாழ்த்துகள்.
எப்படி முதலிரவு ?
அந்த கவலை பெண்ணுக்கே இல்லேங்கிறபோது நமக்கென்னங்க!