மதுர சித்திரைத் திருவிழாவில் வடம் பிடிச்சு இழுக்கிறவங்களை துணிந்து வீசி ஊக்கப் படுத்துற மாதிரி ஆதியின் தோற்றம் இருக்கு.
ஆனா பாவிப்பயலுக, எலக்சன்னு சொல்லி நூத்துக்கணக்கில ஆளுங்களை ஒண்ணா திரட்டி கொரானாவை பார்சல் கட்டி கொடுத்து அனுப்பிச்சிட்டு ,இப்ப வந்து கைய மீறி போச்சு கனம் கோர்ட்டார் அவர்களேன்னு அத்துவிட்டுப் போயிட்டானுக. காயடிச்சிட்டாய்ங்க!
மதுரையில இந்த வருசம் ஆத்துல அழகரும் எறங்கமாட்டாரு ,நாலு மாசி வீதியிலேயும் தேரும் ஓடாது போலிருக்கு.! அதுனால என்ன நாங்க தேரோட்டம் நடத்துறோம்னு சத்யஜோதி தியாகராஜன் ‘அன்பறிவு ‘படத்தில தேரோட்டம் நடத்தப்போறார் போலிருக்கு. படத்தைப்பார்த்தா அப்படித்தான் தோணுது.
புதுமுகம் அஷ்வின் ராம் டைரக்டர்.
நெப்போலியன் ,சாய்குமார் ,ஆஷா சரத் ,விதார்த் ,காஷ்மீரா ,ஷிவானி ராஜசேகர் ,இன்னும் ரொம்ப பேரு நடிக்க இருக்காங்களாம். ரஷ்யாவில போயி ஷூட்டிங் நடத்திருக்காங்க.
வசனத்தை பொன் பார்த்திபன் எழுதிருக்கிறார். வண்டியூர் தெப்பக்குளத்து கோபுரத்து உச்சியிலே உட்கார்ந்து எழுதுனா சும்மா வசனம் கெளப்பிக்கிட்டு வந்திரும். டைவா அடிக்க சரியான இடம். போங்கப்பு, அங்ஙன உக்காந்து பேனாவ ஆட்டுங்க. !
எல்லாம் சரி ,காமெடிக்கு சரியான ஆளு யாரும் சிக்கலியா? வடிவேலு ஊராச்சேப்பு.