
அண்மையில்தான் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ படத்தின் முன்னோட்ட விழா நடந்தது.
சத்யராஜ் ,சசிகுமார் ,சமுத்திரக்கனி ,சிங்கம் புலி ,மிருணாளினி மற்றும் பலர் நடித்திருக்கிற இந்த படத்தின் இசையை அந்தோணிதாசன் அமைத்திருந்தார். கிராமிய இசை பாடகரான இவருக்கு இயக்குநர் பொன்ராம் அளித்திருக்கிற வாய்ப்பினால் அவருக்கு அடுத்த கட்ட நகர்வு இந்த படத்தினால் கிடைக்க இருந்தது.
ஆனால் , பட வெளியீடு கொரானா கொள்ளைநோயின் வீரியத்தினால் தள்ளிப்போயிருக்கிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர்தான் பொன்ராம்,
எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த படத்தின் வெளியீட்டு தேதி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












