டெல்லி ஹல்விடியா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சந்திரா செய்தி நிறுவனமான ஏ என் ஐ .செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கொரானா பற்றிய சில விவரங்களை கூறியிருக்கிறார்.
ஆர் டி பி சி ஆர் சோதனைகளால் கூட கொரானா இரண்டாவது அலை நோய்க்கான அறிகுறிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் மிகவும் எச்சரிக்கையாக மக்கள் இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்.
வறண்ட தொண்டை ,உடல் வலி ,காய்ச்சல் ,நுகர்வு தன்மையின்மை ,ஆகியவைகள் இருந்தால் அது கொரானாவின் அறிகுறியாக இருக்கலாம் என்பதாக எச்சரிக்கப்பட்டு சோதனைகள் செய்யப்படடன” என்று கூறிய டாக்டர் .சந்திரா தற்போது புதிய அறிகுறிகள் பற்றியும் எச்சரித்திருக்கிறார்.
டாக்டர் சந்திரா குறிப்பிட்டுள்ள சில அறிகுறிகள் :
“வயிற்றுப்போக்கு ,அடிவயிற்றில் வலி , தடிப்புகள் ,( rashes ) ,இமைப்படல அழற்சி ( conjunctivitis ) மனக்குழப்பம் ,கை விரல்கள் ,கால் கட்டை விரலில் நிற மாறுதல் ,மூக்கில் ரத்தம் வழிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள்” என்பதாக டாக்டர் சந்திரா கூறியிருக்கிறார்.
—செய்தி உதவி :எம்.எஸ்.என்.நியூஸ்.