
ஆக்சன் படங்களையே தேர்வு செய்து நடித்து வரும் விஷால், மீண்டும் 2 வது முறையாக ஆர்யாவுடன் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார்.இப்படத்தை தொடர்ந்து விரைவில் விஷால் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பறிவாளன்-2 வெளியாக உள்ளது.
தற்போது விஷால் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ‘அடங்க மறு’ படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்க உள்ள இப்படத்தில்,விஷாலுக்கு ஜோடியாக அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கையில் வைத்துள்ள பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என்றும், இப்படம் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.












