
நடிகை திரிஷா தன்னுடைய 38 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடி இருக்கிறார் ,வழக்கம் போல.!
ஆனால் அடுத்த வருட பிறந்த நாள் கணவருடன்தான் என்பதை சக நடிகை தன்னுடைய பிறந்த வாழ்த்துடன் சொல்லியிருக்கிறார். பிரபல தொழிலதிபரை கல்யாணம் செய்யப்போகிறாராம்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை.!
சார்மி ! திரிஷாவின் நெருங்கிய நண்பி. பார்ட்டி தோஸ்த் .!
” மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் திரிஷா.! இதுதான் உனது பேச்சிலர் வாழ்க்கையின் கடைசி பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்கும் என்று ஸ்டிராங்காக நம்புகிறேன்.என்ஜாய் !”என்பதாக வாழ்த்தியிருக்கிறார் சார்மி.
அந்த பிசினஸ்மேன் யார் என்பது இன்னும் தெரியவில்லை.!












