வில்லனாக நடித்தாலும் சோனு சூட்டிடம் மனிதாபிமானம் இருக்கிறது. குறிப்பாக ஏழைகள் மீதான கருணை,!
காட்டாறு போல வந்து கொண்டிருக்கிற கொரோனா 2 வது அலையால்,பாதிக்கப்பட்ட பலர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய பாலிவுட் நடிகர் சோனு சூட் முடிவு செய்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆலைகளாக நிறுவவும் சோனு சூட் திட்டமிட்டுள்ளார்.(இந்த ஆளு மத்திய அமைச்சராக இருந்திருக்க வேண்டும்.)
இதற்காக இந்தியாவில் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியிலும் சோனு சூட் இறங்கி உள்ளார்.
இது குறித்து சோனு சூட் கூறியுள்ளதாவது:
,”ஆக்சிஜன் இல்லாமல் பல நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஒட்டுமொத்த மருத்துவமனைகளுக்கும் சப்ளை செய்ய மட்டுமல்ல, ஆக்சிஜன் சிலிண்டர்களில் நிரப்பி வைக்க வேண்டும். “என்கிறார்.
ஏற்கனவே தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த போதிலும் சமூக வலைதளங்கள் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மருத்துவ உதவிகளை செய்தவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.