
“இது காப்பி அடிக்கப்பட்ட கதை” என்பதாக தங்களுடைய விமர்சனங்களில் சொல்லுவார்கள். ஆனால் அவர்களே இன்னொரு டிவி யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவை காப்பி அடித்து மொக்கை வாங்கிக் கொள்ளுவார்கள்.
விஜய் டிவியில் வெற்றி பெறுகிற பல ரியாலிட்டி ஷோவை பிரபலமான டிவியே காப்பி அடிக்கிறபோது மற்ற தொலைக்காட்சிகளை பற்றி சொல்லவேண்டியதில்லை.
தமிழ்த்திரையுலகில் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய் சேதுபதி’.
தற்போது முன்னணி கதாநாயக நடிகர்களில் ஒருவர் .கை நிறைய படங்கள் . தனது இமேஜை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வில்லன்போன்ற கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்தான் விஜய்சேதுபதி.
.இந்நிலையில் இவர் அடுத்ததாக, தனியார் தொலைக்காட்சிக்காக ‘ரியாலிட்டி’சமையல் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது, அதில், விஜய்சேதுபதி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. டி வி.நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி ஹெலிகாபட்டரில் ‘கெத்து’ காட்டியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடன் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் விஜய்சேதுபதிக்கு இந்நிகழ்ச்சி பெரிதும் கைகொடுக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்












