
கடந்த பொங்கலுக்கு தெலுங்கில் வெளியான ‘கிராக்’ பட த்தை தொடர்ந்து, விஜய்சேதுபதியின் லாபம், பிரபாஸின் சலார் என வரிசைக் கட்டி நடித்து வரும் ஸ்ருதிஹாசன்,கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது சமூக வலைதளத்தில், தான் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவதாகவும், இந்த லாக்டவுன் காலத்திலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தனது இஎம்ஐ பில்களை தானே தான் கட்ட வேண்டும் என்றும், அம்மாவும் அப்பாவும் அதற்கு உதவ மாட்டார்கள் என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தது.இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவரை ஸ்ருதி காதலித்து வந்தார்.
இவருடனான காதல் முறிவுக்கு பின்னர் தற்போது மும்பையை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இந்த லாக்டவுனை தனது ஆண் நண்பருடன் தான் கழிக்கப் போகிறேன் என பதிவிட்டு,சாந்தனு ஹசாரிகாவின் கன்னத்தை கிள்ளியும், தலையில் கொம்பு வைத்தும், முத்தம் கொடுத்தும் அதகளம் செய்துள்ள பல செல்பி புகைப்படங்களை பதிவிட்டுள்ள ஸ்ருதிஹாசன், ‘டூ பைத்தியம்ஸ்’ என்றும் ஹாஷ்டேக் போட்டுள்ளார்.
சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா, டாப்சி, உள்ளிட்ட பல நடிகைகள் இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் தங்களால் முயன்ற கொரோனா நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆண் நண்பருடன் நீங்கள் செய்யும் அமர்க்களமான காதல் லீலைகளை பதிவிட்டுத்தான் ஆக வேண்டுமா என நெட்டிசன்கள் சிலர் ஸ்ருதிஹாசனை விளாசித் தள்ளியுள்ளனர்.












