ஏழு ஆண்டுகளுக்கு முன்பு.!
பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் ‘இனம்’ என்றொரு படத்தை இயக்கி தயாரித்து வெளியிட்டிருந்தார் .படத்தை ரிலீஸ் செய்தவர் லிங்குசாமி.
தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய இன , மான உணர்வுத் தமிழர்களின் ஆயுதமேந்திய போராட்டத்தை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதாக சொன்னார்கள்.
ஆனால் படம் வெளியாவதற்கு முன்பும் ,வெளியான பின்னரும் அந்த படத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன. ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டோம் என்பதாக தெரிவித்த பின்னரும் தமிழர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.
இதனால் திரையிடப்பட்ட சில நாட்களிலேயே அந்த படத்தை தியேட்டர்களில் இருந்து திரும்ப பெற வேண்டியதாகிவிட்டது.
அந்தப்படத்தை தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார் சந்தோஷ் சிவன்.