நெக்ரோஃ பீலியா என்பதற்கு பிணங்களை புணர்கிறவன் என்கிற பொருள் .
இத்தகைய இழிபிறவிகளுக்கு தாயும் ,தாரமும் ஒன்றுதான்.!
கொரானா என்பது கொடிய கொள்ளை நோய். அவர்களது மூச்சுக்காற்று பட்டாலே தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள்.
ஆனால் இழிந்த பிறவிகளுக்கு?
போபால் அரசு மருத்துவமனையில் 43 வயது பெண் அனுமதிக்கப்பட்டிருந்தாள் .கொரானா தொற்று கடுமையாக பாதித்திருந்தது.
சந்தோஷ் அகிர்வார் என்கிற ஆண் நர்ஸ் என்கிற ஓநாய் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறது. அந்தப்பெண் அன்று இரவே இறந்துபோனாள் . இவன் முன்னரே பெண் நர்ஸையும் பலாத்காரம் செய்திருக்கிறான். இதில் என்ன கொடுமை என்றால் இந்த உண்மையெல்லாம் ஒரு மாதம் கழித்துதான் தெரியவந்து அந்த ஆண் நர்ஸை கைது செய்திருக்கிறது போலீஸ்.
இன்னொரு இழி பிறவியை பற்றிய செய்தி.
டிவிட்டரில் பதிவாகியிருக்கிற செய்தி.
ஒரு பெண்ணின் தந்தைக்கு சுவாசிப்பதில் பிரச்னை.கொரானா தொற்று .இதனால் தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரரிடம் உதவி செய்யும்படி கேட்டிருக்கிறார்.
அதற்கு அவன் “நான் சிலிண்டர் வாங்கித் தருகிறேன். அதற்கு பதிலாக நீ என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று நிபந்தனை விதித்திருக்கிறான் .இவனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது?
ஆதாரம் வேண்டுமே? இதுதான் பெண்களுக்கான பிரச்னை.!