” பழகிய நாட்கள் ” எனும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜான் ஏ.அலெக்ஸ்சிஸ்.
இவரது இசையமைப்பில் ” நீயும் நானும்” . என்ற பாடல் தனி இசைப் பாடலாக வெளியாகியுள்ளது.இதில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி நடித்திருக்கிறார்.ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார்.பாடல் வரிகள் கவிஞர் கபிலன் .
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜான் ஏ.அலெக்ஸ்சிஸ் கூறியதாவது, ‘தனியிசை பாடல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலம் ஆனதுபோல தமிழ் இசைப்பாடல்களும் தற்பொழுது பிரபலமாகி வருவது வரவேற்கதக்கது.தமிழ் இசையின் இனிமையும், தமிழகத்தின் பாரம்பரிய வாத்தியக்கருவிகளின் சிறப்பையும் உலகம் மெல்ல உள்வாங்க ஆரம்பித்திருக்கிறது.
விரைவில் தமிழ் இசைப்பாடல்களுக்கு உலக அரங்கில் தனியிடமே உண்டாகியிருக்கும்’ என்கிறார்.
இவர் தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.