2006-ல் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சினேகா , சோனியா அகர்வால் ஆகியோரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம், புதுப்பேட்டை.
புதுப்பேட்டை 2 ம் பாகம் எடுப்பது பற்றி கடந்த ஆண்டு செல்வராகவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.புதுப்பேட்டை படத்தின் 15வது ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழு கொண்டாடியது .
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப் படத்தின் போஸ்டரை வெளியிட்ட செல்வராகவன், மேலும் இந்த பயணம் தொடரும் என குறிப்பிட்டு படத்தில் நடித்திருந்த அனைவரையும் டேக் செய்திருந்தார் .
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தை பயன் படுத்தி இப்பட த்தின் திரைக்கதையை மெருகேற்றும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளாராம் செல்வராகவன்.
இப்படத்தின் படப்பிடிப்பை இவ்வருட இதில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் சாணிக்காகிதம் படத்தின் மூலம் செல்வராகவன் கதாநாயகனாகவும் களமிறங்குகிறார்.
லாக் டவுன் தளர்வுகளுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.இப்படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.