
டி .வி. ஒன்றுதான் மக்களின் பொழுது போக்கு.
அவைகளில் வெளியாகும் சீரியல்கள் பெரும்பாலும் ‘போர் ‘அடித்தாலும் வேறு வழி இல்லாததால் பெண்களுக்கு அது ஒன்றுதான் கதி.
இதனால் நெடுந்தொடர்கள் வருடக்கணக்கில் ‘இழுத்துக்’கொண்டிருக்கின்றன.
கொரானா ஊரடங்கு காரணமாக அந்த நெடுந்தொடர்களுக்கு சிக்கல் வந்திருக்கிறது.
ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்குத் தடை .இதனால் டி .வி.நிலையங்களுக்கு புதிய எபிசோடுகள் வருவதில்லை. ஆனாலும் சன் ,விஜய் ,ஜீ ,ஆகிய நிறுவனங்கள் ரகசியமாக ஷூட்டிங் நடத்துவதாக சொல்கிறார்கள்.
சென்னையைத் தாண்டி கடலோர ரிசார்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அதில் சிலவற்றில் குறைவான ஆட்களுடன் படப்பிடிப்பை நடத்துவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் விஜய் டிவியில் வெளியாகும் பாரதி கண்ணம்மா தொடருக்காக ரகசிய படப்பிடிப்பு நடத்துவதற்கு நடிகை ரோஷிணியை அழைத்ததாக கூறப்படுகிறது.
நாகமாக , கொத்தாத குறையாக சீறி விட்டாராம்.
“என்னய்யா நெனச்சிருக்கீங்க. கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? டெய்லி மரண செய்திகளாக வந்திட்டிருக்கு.இந்த நிலையில ஷூட்டிங் நடத்தலாமா?மக்கள் செத்திட்டிருக்காங்க. அரசாங்கம் அனுமதிக்கட்டும் ,அப்புறம் வருகிறேன்” என்று விரட்டிவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள்.
டி .வி.நிலையங்கள் திருந்துமா?












