சீதையாக நடிப்பதென்ன அவ்வளவு கஷ்டமா?
கரீனா கபூருக்கு 12 கோடி சம்பளமாம் சீதையாக நடிப்பதற்கு.!
பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் வால்மீகியின் ராமாயணத்தை படமாக்கப்போகிறார்கள். அந்தப்படத்தில் நடிப்பதற்குத்தான் கரீனாவுக்கு 12 கோடி.!
பொதுவாக அவர் 6 இலிருந்து 8 கோடி வரைதான் சம்பளம் வாங்குவார் ,இந்த படத்துக்கு தேவையான அளவுக்கு கால்ஷீட் தேதிகள் வேண்டும் என்பதற்காக அவ்வளவு சம்பளம் என்கிறார்கள்.
ராமனாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவும் ,இராவணனாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் நடிக்கிறார்கள்.
கம்ப ராமாயணம் தமிழர் பண்பாட்டுக்கு ஏற்ப எழுதப்பட்டது. வால்மீகி ராமாயணம் வட இந்தியர் பண்பாட்டுக்கு ஏற்ப எழுதப்பட்டிருக்கும். இந்த கதையில்தான் லட்சுமணன் கோடு இருக்கிறது.