
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று இரு கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.
சிந்தனைக்குரியவைதான் இரண்டுமே.!
ஒன்று எதிர்காலத்தைப்பற்றிய கவலை.
மற்றொன்று தமிழர் இனம் சார்ந்த கவலை.வல்லாதிக்கம் பற்றியது.
குழந்தைத் தொழிலாளர் பற்றிய கமல்ஹாசனின் கவலையிது:
“நவீன உலகம் இவ்வளவு வளர்ந்த பிறகும் குழந்தைத் தொழிலாளர் முறை பற்றிப் பேசிக்கொண்டிருப்பது தகாது. பள்ளிகளும் திறவாத சூழலில், வேலைக்குப் போகக் கட்டாயப்படுத்தப்படும் சிறாரை நினைக்கப் பதைக்கிறது. நம் நாகரிகம் மேம்படட்டும்.”என்கிறார் .
சிவலிங்கத்தை கட்டியணைத்த மறு நொடியே மார்க்கண்டேயன் மீது விழுந்த நமனின் நச்சுக்கயிறு அறுந்தோடியது ,சிவன் தோன்றினான் என்கிறது புராணம்.
ஆனால் எத்தனையோ கடவுளர்களை தொழுதும் அற்புதம் அம்மாளின் அழுகுரல் மட்டும் செவிகளில் ஏறாதது ஏன்?
திராவிட அரசுகள் ,ஒன்றிய அரசுகள் என்று ஒன்றைக்கூட வில்லையே? உச்ச நீதிமன்றம் வரை சென்றும் …..ஒன்றும் நடக்கவில்லையே?
இதையே கமல்ஹாசனும் கேட்டிருக்கிறார்.
“மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?”












