நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.
இதனால்தான் அவரது அரசியல் பயணம் தொடரவில்லை. அறிவிப்புகளுடன் நின்று போனது. இது மட்டுமல்ல யாருக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்கவுமில்லை.தற்போதும் எவ்விதமான அரசியல் கருத்துக்களையும் அவர் சொல்வதில்லை .
திரைப்படங்களில் மட்டும் நடித்துவருகிறார். குறிப்பிட்ட கதைகள் தன்னுடைய உடல்நலத்துக்கு ஒத்துக்கொள்வதாக இருந்தால் மட்டுமே கதை கேட்கிறார்.
தற்போது அவரது அண்ணாத்த படம் கோவிட் லாக் டவுனால் தடைபட்டு நிற்கிறது.இந்த படத்தை முடித்துக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்க செல்ல திட்டமிட்டிருக்கிறார்.இதற்கான தனி விமானத்தில் செல்வதற்கான ஒன்றிய அரசின் அனுமதியையும் பெற்று விட்டார் என்கிறார்கள்.கொரானா காரணமாக இந்தியாவிலிருந்து வருகிற விமானங்களை சில நாடுகள் அனுமதிப்பதில்லை. அதனால் ஒன்றிய அரசின் பரிந்துரை அவசியமாகிறது.
அவர் இந்தியா திரும்புவதற்கு எப்படியும் இரண்டு மாதங்களாகும் என்கிறார்கள்.
நலமுடன் திரும்புக .நம்பிக்கை வெல்லும்