
பிரபல நடிகை கவிதாவின் மகன் கொரானாவின் கொடுந்தொற்றுக்கு பலியானார்.
பட உலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிற மற்றொரு மரணச்செய்தியாகும்.
தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளப்படங்களில் கவிதாவை அதிகமாக பார்த்திருக்கலாம்.
இவரது மகன் சஞ்சய் ரூப் கொரானாவினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்.அவரது உடல் நிலை மோசமாகவே மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிர் பிரிந்திருக்கிறது.
கவிதாவின் கணவருக்கும் கொரானா கொடுந்தொற்று இருக்கிறது.
கொரானா கொடுந்தொற்று இரண்டாவது அலைதான் மிகவும் மோசமாக மக்களை காவு வாங்கி இருக்கிறது. அந்த அலையில் திரை உலகத்தை சேர்ந்தவர்களும் சிக்கி பலியாகி வருகிறார்கள்.












