
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் ஏராளமான ரசிகர் பட்டாளமும் இவருக்கு உண்டு..
இவரை டுவிட்டரில் மட்டும் 3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். .

இந்நிலையில் சமீப காலமாக நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பெயரிலான டிவிட்டர் கணக்கு ஒன்று வலம் வருகிறது.
இதில் விஜய்யின் மகன் இரவு நேரங்களில் காரில் நண்பர்களுடன் ஊர் சுற்றும் வீடியோக்களும்,பெண் தோழியர்களுடன் ஆட்டம் போடும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைப்பார்த்த பெரும்பாலான விஜய் ரசிகர்களும் இந்த டுவீட்டர் கணக்கை பின்தொடர தொடங்கி விட்டனர். ஏற்கனவே விஜய்யின் மகள் திவ்யா சாஷா பெயரிலான டிவிட்டரில், பிரபல நடிகரிகன் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியிருந்ததும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜேசன் விஜய் மற்றும் திவ்யா சாஷா ஆகியோரின் பெயரில் வலம் வரும் டிவிட்டர் கணக்கு குறித்து விஜய்தரப்பு ,’இருவர் பெயரிலும் உள்ள டிவிட்டர் கணக்குகள் போலியானது என்றும்,டிவிட்டர் மட்டுமின்றி வேறு எந்த சோஷியல் மீடியாவிலும் அவர்கள் இருவருக்கும் கணக்கு இல்லை என்றும் விஜய் ரசிகர்கள் யாரும் போலி டுவிட்டர் கணக்குகளை பின் தொடரவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
திரையுலக பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் மயில்சாமி, சார்லி மற்றும் செந்தில் ஆகியோரின் பெயர்களில் டிவிட்டரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு தகவல்கள் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.












