
தன்னை விட ,தனது நடிப்புத்திறமையை விட பெயர் ராசியை நம்புகிறவர்கள் அதிகமாக இருக்கிற இடம் திரையுலகம்.
தற்போது நடிகர் அபி சரவணன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’,’ பட்டதாரி ‘மற்றும் ‘மாயநதி’ படங்களில் நடித்துள்ளவர் நடிகர் அபி சரவணன்.
இவர் தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-க்கும் மேற்பட்ட படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.இந்நிலையில்,அபி சரவணன் தனது பெயரை ‘விஜய் விஷ்வா’ என்று மாற்றி கொண்டுள்ளார்.












