
வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி, தொடர்ந்து தெலுங்கு இந்தி என பிற மொழிபடங்களிலும் நடித்து அங்கும் பெரும் வரவேற்பிற்கு உள்ளானார்.
இந்நிலையில்,இந்திய நடிகையாக வலம் வரும் டாப்ஸி, தடகள வீராங்கனையாக ‘ராஷ்மி ராக்கெட்’, திகில் பாணித் தமிழ்ப் படமான `ஜனகனமண’, லூப் லபேடா (பிரபலமான ஜெர்மன் படமான ‘ரன் லோலா ரன்’ படத்தின் தழுவல்), அனுராக் காஷ்யப்பின் ‘தோபாரா’, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் படமான ‘சபாஷ் மித்து’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில் அவர் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, ஒரு படத்துக்கு 5 விரல்களை காட்டி கோடிகளில் சம்பளம் வாங்கி வந்த டாப்ஸி இனி தயாரிப்பாளர்களிடம், எட்டு விரல்களை காட்ட முடிவு செய்துள்ளாக பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.
,தற்போது டாப்ஸி,புடவை, கூலிங் கிளாஸ் அணிந்து, ரஷ்யாவின் ‘பீட்டர்ஸ்பர்க்’ சாலையில் ‘கெத்தாக’ சுற்றித்திரியும் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












