
தொல்லைகளை தோளில் தூக்கிப்போட்டுக்கொள்வதில் சிலருக்கு அலாதி பிரியம் .இல்லாவிட்டால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுவிடுமோ ,என்னவோ.!கங்கனா ரனாவத் பற்றித்தான் சொல்கிறோம்.
தமிழகத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவரைப்பற்றிய பயோபிக்கில் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார்.அந்தப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றிய கமிஷன் இன்னும் அறிக்கையை கொடுத்தபாடில்லை. இந்த நிலையில் அந்தப்படம் வெளிவந்தால் எத்தகைய தாக்கத்தை உருவாக்குமோ தெரியாது.!
இன்னொரு படம் அபராஜித் அயோத்யா. ராம் மந்திர் பிரச்னையை பற்றிய கதை. பாகுபலி விஜயேந்திர பிரசாத் கதையை அமைத்திருக்கிறார்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கங்கனா .
அடுத்த பிரச்னையை உருவாக்குகிற படம் இந்திரா காந்தியை மையப்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான வெறுப்பை உருவாக்கிய எமர்ஜென்சி பற்றிய கதையில் இந்திராவாக நடிக்கப்போகிறார் .இதற்காக ஒப்பனை செய்து கொண்ட கங்கனாவின் படத்தை பார்த்தபோது புலியைப்பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை மாதிரி இருக்கிறது.












