
ராஜ்கமல் படப்பிடிப்பு நிறுவனம் தயாரிக்கிற விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கமல்ஹாசன் நடிக்கிற இந்த படத்தில் சத்யன் சூரியன் கேமரா ,இசை அனிருத். ஃ பகத் பாசில் வில்லன் .
விஜய்சேதுபதியும் ஒரு வில்லன் என ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் சம்பளம் 15 கோடி கேட்டாராம்.
தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி. “இத்தனை கோடி கேட்கிறாரா?”
அதற்கு லோகேஷ் கனகராஜ் அந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்தால் எந்த அளவுக்கு படத்துக்கு பலம் என்பதை கமல்ஹாசனிடம் எடுத்து சொல்லி சமாதானம் செய்ததாக சொல்லப்படுகிறது.
விஜய்சேதுபதியை சமாளிக்கும் பொறுப்பை இயக்குநரே ஏற்பதாக சொன்னார் என்கிறார்கள்.












