சம்பூர்னேஷ் பாபு. ஆந்திராவின் வில்லங்கமான நடிகர்.
அநேகமாக நம்ம ஆர்ஜே பாலாஜி மாதிரி என சொல்லலாம்.!
இவர் தற்போது நடித்துள்ள படத்தின் பெயர் காலிபிளவர். ஆர்.கே.மாலினேனி இயக்கியிருக்கிறார்.இந்த படத்தின் புரமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளன.
சட்டசபை கட்டிடத்தின் முன்பாக சம்பூர்ண பாபு முழு நிர்வாணமாக நிற்பது போலவும் அந்தரங்க பகுதியை மட்டும் காலிபிளவரை வைத்து மறைப்பது போலவும் அந்த போஸ்டர் இருக்கிறது.தன்னுடைய எதிர்ப்பினை இப்படி உணர்த்துகிறாராம் .
இவர் ஆங்கிலேயராக நடிக்கிறார்.இவரது காதலியாக வசந்தி நடித்திருக்கிறார்.ஆந்திரா வந்ததும் அவர் அனுபவிக்கிற துயரங்களை கதையாக சொல்லுகிறாராம்.