முன்னாள் சி.எம் .வீட்டு மணவிழா ஒப்பந்தம் முறிவு!நடிகை முடிவு !!

மெஹரீன் ….!
நினைவிருக்கிறதா, நெஞ்சில் துணிவிருந்தால் பட நடிகையை.!
நோட்டா ,பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்திருப்பவர். இடை சிறுத்த சின்னச்சிட்டு .இளமை பூரித்த தேகம் .புன் சிரிப்பு. தெலுங்கிலும் செல்வாக்கான நடிகை.!
என்னவோ தெரியவில்லை.இவரது திருமண நிச்சயதார்த்தம் முறிந்து போனது.!காரணம் தெரியவில்லை.!
அரியானா மாநிலத்து முன்னாள் முதல்மந்திரியான பஜன்லாலின் பேரன்தான் பவ்யாபிஷ்னாயி .இவருக்கும் நடிகை மெஹரினுக்கும்தான் மிகவும் ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
பெரிய இடத்து சம்பந்தம் ,அமர்க்களமாக நடந்தது.
கொரானா காலம் முடிந்ததும் சிறப்புடன் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ,பஜன்லால் குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும்.!
மெஹரீன் சொல்கிற காரணத்தில் சில பல நெருடலாக இருப்பதே காரணம்.
“பவ்யா பிஷ்னாயும் ,நானும் சேர்ந்து எடுத்த முடிவுதான் மணவிழா ஒப்பந்த முறிவு.!இரு தரப்பினரும் இணைந்து எடுத்த நல்ல முடிவு. நெஞ்சுக்கு நீதி.இன்றிலிருந்து பவ்யாவுடன் மட்டுமின்றி அவரது குடும்பத்தாருடன் எவ்வித தொடர்பும் எனக்கில்லை.அவரது நண்பர்களுக்கும் இது பொருந்தும் .”என்று மெஹரீன் கூறி இருக்கிறார் .