
கணவனும் மனைவியுமாக பதினைந்து ஆண்டுகள்.!
கடந்து சென்றது தெரியவில்லை.
காதலை மதித்து நேசித்து வாழ்ந்தோம்.நம்பிக்கை ,ஒருவர் மீது ஒருவர்க்கு இருந்த மரியாதை.!
தற்போது புதிய வாழ்வு,கணவன் மனைவியாக இல்லாது எங்களது பிள்ளையை வளர்க்கும் பெற்றோராக.!
சில காலங்களுக்கு முன்னரேயே பிரிந்து வாழ்வதென முடிவெடுத்திருந்தோம்.!
எங்களின் மகன் ஆஜாத் .அவனை போற்றி வளர்க்கிற பொறுப்பு.!
இதுநாள் வரை எங்களை புரிந்து கொண்டு ஆதரவு நல்கிய நல்லுள்ளங்கள் எதிர்வரும் காலத்திலும் வாழ்த்துகளை வழங்கி ஆதரியுங்கள்.!
–இப்படி உருகி மருகி தங்களின் விவாகரத்தினை விளக்கியிருக்கிறார்கள் பாலிவுட் பிரபலம் ஆமிர்கான்,மற்றும் கிரண்ராவ் .!












