
“டேய் தகப்பா” என்பது தமிழ்ப்படத்தின் தத்துவத் தலைப்பு. நல்ல வேளை “…..த்தா ,தகப்பா”ன்னு வைக்கலியேன்னு சந்தோஷப்படுங்க.!
நாயகனாக அறிமுகமாகிறவர் யார் தெரியுமா?
பிரபல இயக்குநர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் .!
சி.வி. விக்ரம் சூர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத்தான் அவ்வளவு சிறப்பான பெயரை வைத்திருக்கிறார்கள்.
விருது பெற்ற குறும்படங்களை இயக்கியவர் கௌசிக் ஶ்ரீபுஹர். இந்த படத்தின் வழியாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார்.
படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க,மற்றும் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு – எஸ்.ஜெ.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார்.












