
நாளை சென்னை வந்து சேருவார் நடிகர் ரஜினிகாந்த் என்று புது செய்தி வந்திருக்கிறது.
சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ள ரஜினி அது தொடர்பான செக் அப்புக்காக அமேரிக்கா சென்றிருந்தார். அங்கு எல்லாமே நல்ல விதமாக முடிந்து இன்று சென்னை வருவதாக இருந்தது. ஆனால் ஒரு நாள் தாமதமாக நாளைதான் வருகிறார் என்கிறது லேட்டஸ்ட் செய்தி.
தீபாவளி வெளியீடாக நவம்பர் 4 ஆம் தேதி வரவிருக்கிற அண்ணாத்தே படத்தில் கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,பிரகாஷ் ராஜ் ,குஷ்பு ,மீனா ,சதீஷ் ,இன்னும் சில பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்குகிறார் .
ரஜினி நடிக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்ட்தாக சொல்லப்பட்டது. ஆனால் பேட்ச் ஒர்க் இன்னும் முழுமை பெறவில்லை என்பதால் அவரை வைத்து சில காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
கதையின் நிகழ்வு கொல்கத்தாவை அடிப்படையாக வைத்திருப்பதால் அங்கு சென்று சில காட்சிகளை எடுக்க வேண்டியதிருக்கிறது என்கிறார்கள். வருகிற 12 ஆம் தேதி சென்னையில் விரட்டல் -துரத்தல் காட்சியை முடித்து விட்டு கொல்கத்தா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி கொல்கத்தா செல்வாரா என்பது தெரியவில்லை.ஆனால் இன்னும் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு வேலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












