“ஆறாமல் ஆறும் காயங்கள் ஏது ?”
எழுதிய கவிஞரின் பெயர் தெரியவில்லை.
காதலினால் ஏற்படுகிற காயங்களை ஆற்றும் அருமருந்து எதுவாக இருக்கும் ?
பதின்ம வயதில் மனதில் ஏற்படுகிற சலனம் சுவையாகத்தான் இருக்கும்.சலனம் எதிர்பாலினத்தவராக இருந்தால் சுவையில் இனிமை கூடிவிடும்.
புகழ் பெற்ற நடிகர்கள் தங்களின் மனதில் பூத்த முதல் ஆசை யார் மீது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
ஆந்திராவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவுக்கு ஆலிவுட் நடிகை டெமி மூர் மீது ஆசையாம்..26 ஆண்டுகள் சென்ற பின்னர் நம்ரதா மீது காதல் ஏற்பட்டு காய் கூடியும் இருக்கிறது.
ஜுனியர் என்.டி ஆர் ,ராம் சரண் இருவருக்கும் ஒரே ஆள் மீது ‘ல்தகா’ எப்பூடி ? இருவரும் சைட் அடித்தது ஸ்ரீ தேவி மீது.! இவர்களில் யாராவது வெற்றி பெற்றிருந்தால் ஒருவேளை ஸ்ரீதேவி இறந்திருக்க மாட்டார். கட்டம் மாறியிருக்கும்ல!
அல்லு அர்ஜூனுக்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் இருந்திருக்கிறது.அவர் நடித்த ஒரு படத்தைக்கூட ‘பன்னி ‘ மிஸ் பண்ண மாட்டாராம். அதென்ன பன்னின்னு கூப்புடுறாங்க?
பாகுபலி பிரபாஸ் சென்னையில் டான்பாஸ்கோ ஸ்டூடண்ட் .! இவருக்கு கிளாஸ் டீச்சர் மீது லவ்ஸ் ! இன்று வரை நினைவில் நிற்கிறார் அந்த டீச்சர்.! பிள்ளை குட்டி பெத்துருப்பாங்களே அந்த டீச்சர் !