நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையானார். ஏற்கனவே ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள்.இப்போது ஆண் மகவு பிறந்திருக்கிறது.
தன்னுடைய தந்தையே வந்து பிறந்திருப்பதாக ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.
நாமும் வாழ்த்துவோம்.
அவர் தன்னுடைய தந்தையின் படத்தின் கீழ் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.
“8 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…
என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.
அம்மாவும் குழந்தையும் நலம்”