
மூத்த நடிகர். தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்து அசத்துகிற தெலுங்கு நடிகர்.இவருக்கு டப்பிங் பேசியவரும் பொருத்தமான குரலில் பேசி தனிச்சிறப்பினை தருவார்.
ஆந்திராவின் ஹீரோக்களை பற்றிய தனது கருத்தினை அச்சமின்றி சொல்லியிருக்கிறார்.
ஆந்திர திரைப்பட நடிகர் சங்கமான ‘மா ‘விற்கு நடக்கவிருக்கிற தேர்தல் பற்றிய கருத்தினை கனல் கக்க சொல்லியிருக்கிறார்.
“கதாநாயகர்களின் ‘காஸ்ட்யூம் ‘மாறுகிறதே தவிர அவர்களது மனப்பான்மை மாறவில்லை.!
அவர்கள் புதியவைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் அறிவினை தீட்டுவதில்லை.!
மைக்கைப் பிடித்தால் எப்படி பேசுவது என்பது கதாநாயகர்களுக்கு தெரியவில்லை.
மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை.
பணம் வைத்திருக்கிற நாயகர்களுக்கு நடிக்கத் தெரியவில்லை.”என்பதாக கூறியிருக்கிறார்.












