இயக்குநர் சீனு ராமசாமி. வித்தியாசமான கதைக்களங்களில் பயணிப்பதில் பெருநாட்டம் கொண்டவர். அமரர் பாலு மகேந்திராவின் சீடர்களில் இவரும் முக்கியமானவர்.
இசை ஞானி -யுவன் -விஜயசேதுபதி கூட்டணியில் சீனு ராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அடுத்து இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் .
கிராமத்துப்பின்புலத்தில் ஆக்சன் திரில்லர். தேனியில் படப்பிடிப்பு. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
ஸ்கைமேன் பிலிம் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரிப்பு.