
நடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்தா, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் , மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களையும் நயன்தாரா தேர்வு செய்து நடித்து வருவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
மாயா, காஷ்மோரா படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பட நிறுவனத்துடன் நயன்தாரா இணைந்துள்ளார்..கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த விக்னேஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து இனிமேல் ஹீரோக்களை மையப்படுத்தும் படங்களில் நடிப்பதில்லை என்ற அதிரடி முடிவையும் நயன்தாரா எடுத்துள்ளாராம்.இதனால் முன்னணி நடிகர்கள் நயனை புறக்கணிக்கலாம் என்கிற செய்தியும் கோலிவுட்டில் பவனி வருகிறது.பொதுவாக ஹீரோக்களை மையப்படுத்துகிற கதைகள்தான் தமிழ்நாட்டில் கமர்ஷியல் ரீதியான வெற்றிப்படங்களாக அமையும்.
மேலும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தனது திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படியும்,விக்னேஷ் சிவன் குடும்பத்தாரையும் திருப்தி படுத்தும் வகையில் தான் இந்து முறைப்படியும் விரைவில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் நயனின் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்று நயன்தாராவின் நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.












