
“என்னாது என்னோட கல்யாணம் செல்லாதா? யாரு சொன்னது? என்னோட புருஷன் இப்ப அமெரிக்காவில் இருக்கார்.”என்று சற்று காட்டமாகவே பேசினார் பிரியாமணி.
தெலுங்கு படப்பிடிப்பு .தமிழில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரை தெலுங்கில் செய்து கொண்டிருந்தார்.
இவரது கணவர் முஸ்தபாராஜின் முதல் மனைவி கோர்ட்டில் கிரிமினல் வழக்குடன் “தன்னை முஸ்தபா இன்னும் டைவர்ஸ் பண்ணாத நிலையில் பிரியாமணியுடன் நடந்ததாக சொல்லப்படுகிற திருமணம் செல்லாததாக அறிவிக்கவேண்டும் “எனக்கூறி மற்றொரு வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
இது தொடர்பாக கேட்டபோதுதான் பிரியாமணி முதலில் சொன்னது போன்று சொல்லியிருந்தார்.
“எங்கள் உறவு நன்றாகவே இருக்கிறது.அவர் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் இருந்தாலும் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவர் பிசியாக இருக்கிறார்.தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம் “என்றார் பிரியாமணி .












