ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் புருவத்தை உயர்த்தியும், சுருக்கியும், கண் அடித்தும் ஒரே நாளில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று உலகம் புகழ் பெற்ற நடிகையானார் பிரியா வாரியர்
இதையடுத்து அவருக்கு மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வரும் இவர், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர் ஆண் நண்பர் ஒருவருடன் ஒரு கார்டை உதட்டின் மீது வைத்து விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விளையாட்டின் போது கார்டு காற்றில் பறந்து போக உதட்டோடு உதட்டில் முத்தமிட்டுக்கொள்கின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காகி, அவரது ரசிகர்களும் , முத்த விளையாட்டை வீடியோவாக்கி வெளியிட்டு வருகின்றனர். பலரும் இதெல்லாம் எங்க போய் முடியுமோ? கலி முத்திப்போச்சு கொரோனா வந்தும் இதுக திருந்தலையே என்றும் பதிவிட்டு வருகின்றனர்.