
“அண்ணே ,அவருக்கு கொரானா பயம்.ரூமை விட்டு வெளியே வர்றதில்லை.அவர் மதம் மாறலண்ணே !இன்னமும் குங்குமம் வச்சிட்டு சாமிதான் கும்பிடுறார்”என்கிறார் கிராமராஜன் என்கிற ராமராஜனின் முன்னாள் மனைவி நளினி.!
உறுதி செய்யப்பட்ட செய்திதான் என்பது மாதிரி அவிழ்த்து விடப்பட்ட இந்த வறட்டு செய்தி பற்றி அப்படி சொன்னார் நளினி..
ராமராஜனோ “சாமி கும்பிட்டுவிட்டு கோவில்லே இருந்து வரேன்ணே ,என்னண்ணே விசேஷம் ?” என்று நம்மிடம் கேட்கிறார். சொன்னோம்.
“நான் எப்ப பொது வாழ்க்கைக்கு வந்தேனோ அப்பவே எல்லா மதமும் சம்மதம்தான். நான் எங்கேயும் மாறலேண்ணே ” என்றார் .












