
நடிகைகளின் அதிர்ஷ்டத்தின் மீது சில இயக்குநர்கள் நம்பிக்கை வைப்பார்கள். அவர்கள் நடித்ததால்தானோ என்னவோ நமது படம் வெற்றி பெற்றிருக்கிறது என நம்பி தங்களின் அடுத்த படத்துக்கும் வாய்ப்புகள் வழங்குவார்கள் .
அத்தகைய நம்பிக்கை சீனு ராமசாமிக்கும் வந்து விட்டதா ?
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்களைத்தொடர்ந்து விஜய் சேதுபதி-இயக்குநர் சீனுராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் மாமனிதன்.
கிராமத்தையும் விவசாயத்தையும் மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது .
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத தனது அடுத்த படத்தின் வேலைகளை சீனு தொடங்கியுள்ளார். இப்படத்தில் தனது முந்தைய பட நாயகி காயத்ரி சங்கரையே மீண்டும் கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார்.
அழகான கிராமத்துக்கதையாக உருவாகியுள்ள இத்திரைக்கதையில் திரில்லரையும் இணைத்துள்ளாராம் இயக்குனர் சீனுராமசாமி.
ஆண்டிப்பட்டி, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது
இதில் காயத்ரி ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார். எம்எஸ் பாஸ்கர், உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.












