
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’.திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஜார்ஜியா நாட்டில் சில நாட்கள் நடந்தது.. பின்னர் ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் சென்னையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடந்தது.
இதில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மற்றும் சில முக்கிய காட்சிகளும் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் இப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் இப் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘பீஸ்ட்’ படக்குழு வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அங்கு அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப் படத்தை வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












