
“எப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது?
திருமணத்துக்கு முன்னர் ஓய்வறியாத வேலை.இடைவிடாத படப்பிடிப்பு. ஆனாலும் நடிகை காஜல் அகர்வால் இப்படி சலித்துக்கொண்டதில்லை.
“கணவருடன் கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய் ஜாலியாக இருக்க வேண்டும் “என இப்போது நினைக்கிறார் என்றால் “வாழ்க்கை புரிந்து விட்டது” என்று தானே அருத்தம் ?
கவுதம் கிச்சுலுவுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கிவிட்டார் என்றாலும் திரை உலக வாழ்க்கைக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியதாக இருக்கிறது. தினமும் 16 மணி நேரம் உழைக்க வேண்டியதாக இருக்கிறது.
கமல்ஹாசனுடன் இந்தியன்,2,பாரிஸ் பாரிஸ் ,மற்றும் ஹே சிம்ஹா ,ஆச்சார்யா ஆகிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்தியன் 2 எப்போது தொடங்கும் என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
என்றாலும் தெலுங்கு படவுலகில் மோஸ்ட் வாண்டட் ஆர்ட்டிஸ்ட் காஜல்தான்.!
இதனால் அதிக அளவில் கால்ஷீட் கொடுத்து களைத்துப்போயிருக்கிற காஜல் “தன்னுடைய கணவருடன் கண்காணாத இடத்துக்கு சென்று ஜாலியாக இருக்க “ஆசைப்படுகிறார்.
மாலத்தீவு நினைவுகளை மறுமுறையும் நிஜமாக்கும் முயற்சிகள் .!இளமை இருக்கும்வரை ஆடு! பாடு!!












