
“எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படம் “அழகிய கண்ணே”.
இதில்,லியோ சிவகுமார் கதாநாயகனாக நடிக்கிறார் . இவர் யாரென்றால் பட்டி மன்ற பேச்சாளர் திமுக பிரமுகர் திண்டுக்கல் லியோனின் மகன்.
இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு சாலமன் மற்றும் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியிடம் துணை இயக்குனராக பணியாற்றிய ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.
கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத, என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஜய்சேதுபதி இத்திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் .தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .












