
எடப்பாடி பழனிசாமி ,ஓபிஎஸ் இருவரது தலைமையின் கீழ் நடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பிச்சைக்கார நாடாக மாறி விட்டது என்பதுதான் சரித்திர சாதனை.!
புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த அறிக்கையில் “2020-21 ம் ஆண்டு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.61320 கோடி.
இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.16 சதவிகிதம் ஆகும்.
இதற்கு காரணம் என்ன?
செலவினங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. நிதி அளிக்கும் பொறுப்புகள் ஒத்திவைக்கப்பட்டு , பற்றாக்குறைகள் மறைக்கப்பட்டன.
2012 -13 ஆண்டு முதல் மாநில அரசின் ஒட்டு மொத்த கடன் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 263976 லட்சம் பொதுக்கடன்.
2021 -22 இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி ஒட்டு மொத்த கடன் 570189 கோடி.
நம்மை கடன்காரர்களாக மாற்றிவிட்டு அதிமுக அமைச்சர்களை கோடீஸ்வரன்களாக்கி விட்டது இபிஎஸ் -ஓபிஎஸ் ஆட்சி.
இந்த வெள்ளை அறிக்கை பற்றி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையாவது.:
“கஜானா காலி என்றாலும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது.
இது வெள்ளை அறிக்கை இல்லை.மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்” என்கிறார்.












