
அரசமரத்தைப் பிடித்த சனியன் அங்கே அமர்ந்திருந்த பிள்ளையாரையும் சேர்த்தே பிடித்தது என்பார்கள்.
அது மாதிரி ஆகிவிட்டது பொன்னியின் செல்வன் பட இயக்குநர் மணிரத்னத்தின் கதையும்.!
படப்பிடிப்பின் போது ஒரு குதிரை இறந்து விட்டது.! பீட்டா அமைப்பினருக்கு இது போதாதா?
கோர்ட்டுக்கு இழுத்து விட்டார்கள் மணிரத்னத்தை.!
அவர்களால் பட வெளியீட்டினை தள்ளிவைக்கிற ஆபத்தும் இருக்கிறது.
இந்த நிலையில்தான் அந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான திரிஷாவை கைது செய்ய சொல்லி ஒரு குரூப் கிளம்பியிருக்கிறது.
இந்தூரில் பழமையான ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தபோது திரிஷா காலில் செருப்புடன் நடந்த வீடியோ வெளியாகிவிட்டது.
சிவலிங்கம், நந்திக்கு இடையில் ஐஸ்வர்யா ராயுடன் திரிஷா நடந்து சென்றபோது அவரின் காலில் செருப்பு இருந்தது தெரிந்திருக்கிறது.இந்த வீடியோ எவ்வளவோ கட்டுப்பாடுகளை கடந்து வெளியாகி வைரலாகிவிட்டது.
இது பற்றிய வீடியோவைப் பார்த்த ஒரு குரூப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறது. திரிஷாவை கைது செய்யச்சொல்லி புகாரில் வற்புறுத்தியிருக்கிறார்கள்.
நடக்குமா?
யூனிட்டுக்குள்ளேயே ஒரு கருப்பு செனை ஆடு! குட்டி போடுமா?












