
தெலுங்கு பட மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் சாய் தரம் தேஜ் விபத்தில் படுகாயம் அடைந்து சுய நினைவின்றி இருக்கிறார். இவரும் நடிகரே .!
இவர் பைக் பிரியர். தல அஜித் மாதிரி.! ஸ்போர்ட்ஸ் பைக் வைத்திருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுவது இவரது பொழுதுபோக்கு.
வெள்ளிக்கிழமை மாதாபூர் ஏரியாவில் கேபிள் பிரிட்ஜ் அருகில் மிக மிக வேகமாக பைக்கை ஓட்டி சென்றபோது மணலில் சிக்கி ஸ்கிட் ஆகிவிட்டது. பலத்த காயங்களுடன் 108 அவசர ஆம்புலன்சில் அருகில் இருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுய நினைவில்லாமல் இருந்த அவரை உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தார்கள். இன்னமும் நினைவு திரும்பவில்லை. ஐ.சி.யு வில் வென்டிலேஷன் உதவியுடன் சிகிச்சை தொடருகிறது.
சிரஞ்சீவி ,அல்லு அரவிந்த், பவன் கல்யாண் ,வைஷ்ணவ தேஜ் ,நடிகை நிகாரிகா சந்தீப் கிஷன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்கள்.
தற்போதைய நிலையில் மேஜர் அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை.24 மணி நேர அப்சர்வேஷனுக்கு பின்னர் தொடர் சிகிச்சை பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.












